ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அவதார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் 3d தொழில்நுட்பத்துடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாக்கியது. இந்தத் திரைப்படம் சுமார் உலகம் முழுவதும் 160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 18000 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியை நிலை நாட்டியது கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது அவதார் 2 இதுவரை அதிக வசூலித்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் அவதார் திரைப்படம் நிலைநாட்டியுள்ளது இருந்தாலும் முதல் பாகத்தின் வசூலை இந்த திரைப்படத்தால் எட்ட கூட முடியவில்லை என்பது வருத்தம் தான்.
மேலும் இந்த திரைப்படம் சிறந்த விசுவல் எபெக்ட் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளது. குழந்தைகளை வெகுவாக கவரும் இந்த திரைப்படம் திரையரங்கில் பலரும் கண்டு மகிழ்ந்தார்கள் இந்த நிலையில் OTT ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இன்று அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய OTT இணையதளத்தில் வெளியாகிறது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் கோடை விடுமுறை நெருங்குவதால் இந்த சம்மரில் குழந்தைகளுக்கு செம ட்ரீட்டாக இந்த திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள் OTT இணையதளத்திலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே OTT இணையதளத்தில் பல திரைப்படங்கள் நல்ல இடத்தை பிடித்துள்ளதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கிட்டத்தட்ட முதல் இடம் பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.