தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் ரொம்ப பிடித்திருந்தாலும் பிற மொழி படங்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் ஹாலிவுட் படங்களை அதிகம் பார்த்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் அயன் மேன், பேட்மேன் என சொல்லிக்கொண்டே போகலாம்..
அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்த படங்கள் நிறைய இருக்கின்றன அதில் ஒன்றுதான் அவதார் திரைப்படம். முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பதிவு செய்ததை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் பெரிய அளவில் எதிர்பார்க்கபட்டது. ஆனால் 13 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ளது.
இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் செம்ம சூப்பராக இருந்து வருவதாக படத்தை பார்த்த பலரும் கூறி வருகின்றனர் இந்த படத்தில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் சூப்பராக இருக்குமாம்.. குறிப்பாக நீருக்கு ஆடியில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் வியக்க வைத்ததாக சொல்லி வருகின்றனர்.
தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே உலக அளவில் 1.3 பில்லியன் டாலர் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது அதன் இந்திய மதிப்பின்படி 1,07,57,50,65,000 இருக்கும் என சொல்லுகின்றனர். 10 ஆயிரம் கோடி வசூல் செய்திருந்தாலும்..
இந்த படம் இன்னமும் 700 மில்லியன் டாலர் வசூல் குவித்தால் மட்டுமே படம் ஹிட் ஆகும் என தெரிய வந்துள்ளது. அவதார் 2 திரைப்படத்தை தொடர்ந்து பல படங்கள் வெளி வந்தாலும் இந்த படத்திற்கான மவுஸ் இன்று வரை குறையவில்லை அதனால் நிச்சயம் 700 மில்லியன் டாலரை எல்லாம் ஆசால்டாக தட்டி தூக்கி ஹிட் ஆகும் என பலரும் சொல்லி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..