சினிமா உலகைப் பொருத்தவரை மொழி தேவையில்லை படம் புரியும்படியும் சிறப்பாக இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் ஹிட்டடிக்கும். ஏன் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு எப்படி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி அதையும் தாண்டி ஹாலிவுட் படங்கள் கூட இங்கே ஹிட் அடிக்கிடக்கின்றன.
அதுபோலவே தான் தமிழ் படங்களும் மற்ற இடங்களிலும் ஹிட் அடித்து நொறுக்குவது வழக்கம். அண்மையில் வெளியான புஷ்பா படங்கள் மற்ற ஏரியாக்களில் அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா திரைப்படம் இதுவரை சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்ததால் இன்னும் சிறப்பாக ஓடி கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் தாண்டி கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த படத்தை பார்த்து கண்டுகளித்து என கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரவீந்திர ஜடேஜா புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜுன் போல வேடமணிந்து இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வேற லெவல் வைரலானது அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலான பாடல் மற்றும் வீடியோக்களுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.
இப்போது புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு டேவிட் வார்னர் அப்படியே அல்லு அர்ஜுன் போல் நடனம் ஆடி அசத்திஉள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் ஷேர் செய்து இன்னும் அதை வைரலாக முயற்சி செய்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..
#WarnerBros #Puspa pic.twitter.com/WLIRUIxAOV
— suresh (@suresh9590) January 24, 2022