“அரபி குத்து” பாடலுக்கு வித்தியாசமாக நடனம் ஆடி அசத்திய யாஷிகா – கலாய்க்கிறார் என கூறும் ரசிகர்கள்.?

yashika-
yashika-

சமீபகாலமாக சினிமாவில் பயணித்து வரும் நடிகைகள் பலரும் முதலில் மாடலிங் துறையிலிருந்து வந்தவர்களே ஆவார்கள். ஆம் அதில் தற்போது சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் முதலில் மாடலிங் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக பயணித்து வந்தனர்.

பின்பு அவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் யாஷிகா ஆனந்த் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படமாகவே இருக்கும இப்படி கவர்ச்சி கன்னியாக சினிமா உலகில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜப்பி போன்ற படங்களில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

மேலும் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில்  அரைகுறை ஆடையில் வலம் வந்து எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சில முக்கிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவன் தான் உத்தமன், கடமையை செய், சல்பர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அப்பப்போ கலந்துகொண்டு தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.

yashika-anand
yashika-anand

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடிகை யாஷிகா செம கிளாமராக டான்ஸ் ஆடியுள்ளார். அதனை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.