விஜய்க்கு ஆசை காட்டி மோசம் செய்த அட்லீ.? கடைசியில் வேறு ஒரு நடிகரை புக் செய்த சம்பவம்..

atlee-and-vijay
atlee-and-vijay

காலம் மாற மாற இயக்குனர்களும், நடிகர்களும் அப்டேட் ஆக இருந்தால் மட்டுமே சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்ட முடியும் அதை சரியாக இப்பொழுது செய்து வருபவர் தான் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டெண்ட் ஆக இருந்து ஒரு கட்டத்தில் முழுநேர இயக்குனராக தன்னை மாற்றிக்கொண்டார்.

எடுத்தவுடனேயே நயன்தாரா, ஆர்யா, சந்தானம், சத்யராஜ், நஸ்ரியா, ஜெய் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இவர் எடுத்த திரைப்படம் ராஜா ராணி இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக இருந்தது. அதன்பின் இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து.

தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு சினிமா உலகில் சிறப்பாக  வலம் வருகிறார். மீண்டும் இவர் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஹிந்தி  பக்கம் சென்று டாப் நடிகரான ஷாருக்கானுக்கு கதை சொல்லி அங்கு கமிட்டானார்.

ஆனால் தற்பொழுது அங்கு நிலவும் சூழல் சரியில்லாததால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்பொழுது அடுத்தடுத்த நடிகர்களுக்கு கதையை சொல்ல ரெடியானார். அந்த வகையில் மீண்டும் விஜய்க்கு கதை ஒன்று சொல்லுவார் என சமூக வலைதளப் பக்கங்களில் பெரிதாக பேசப்பட்டது.

ஆனால் திடீரென நடிகர் விஜய்க்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லியுள்ளார் அந்த கதை பிடித்துப் போகவே இருவரும் இணைந்து பணியாற்ற ரெடியாக இருக்கிறார்களாம் இச்செய்தி தற்போது இணையதளத்தில் உலா வருவது.