சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண ஆசைப்பட்ட இயக்குனர் அட்லீ – கடைசி நேரத்தில் கைநழுவியது.?

atlee
atlee

தமிழ் சினிமா உலகில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தோல்வியை காணாத இயக்குனர்களாக இருக்கின்றனர் அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளவர்தான் இயக்குனர் அட்லீ. முதலில் இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து அவரிடம் அனைத்து வித்தைகளையும் கற்று அறிந்த..

பின் ராஜா ராணி என்னும் படத்தை இயக்கி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பின் இவர் விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு தற்போது பாலிவுட் பக்கம் திசை திரும்பி ஷாருக்கானுடன் கைகோர்த்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அட்லீ, சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி ராஜா ராணி திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு அதற்கு ஏற்ற முறையான நடிகர்களை தேர்வு செய்தார்.

அப்போது சிவகார்த்திகேயயை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முற்பட்டான் ஆனால் அப்போது சிவகார்த்திகேயன் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ ஆனால் அவருக்கு ஜோடி நயன்தாரா என்பதால் அந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாமல் போனது.

பின் நடிகர் ஜெய் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பொழுது சிவகார்த்திகேயனும், அட்லீயும் இணைய முடியாமல் போனது. ஆனால் இவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது .