இயக்குனர் ஷங்கருக்கு பிறகு ஓரளவு மிகப்பெரிய தொகையில் சிறப்பான படங்களை எடுத்து வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் அட்லீ. இதற்கு முன்பு பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீ இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெற்றி படங்களை தமிழ்சினிமாவில் கொடுத்துக்கொண்டிருந்த இவருக்கு திடீரென மார்க்கெட் வேற லெவல் உயர்த்தியதால் தற்போது தமிழை தாண்டி ஹிந்தி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஹிந்தியில் முதல் படமே டாப் நடிகரான ஷாருக்கானை வைத்து இவர் படமெடுப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, யோகிபாபு போற்ற தமிழ் நட்சத்திர பட்டாளங்கள் ஒவ்வொருவராக தூக்கி கொண்டு இருந்த அட்லீ திடீரென தமிழ், மலையாளம் ஆகிய சினிமாக்களில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகையான பிரியாமணியின் திடீரென ஒப்பந்தமும் செய்து உள்ளார்.
ஏற்கனவே ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கூடிய நிலையில் தற்போது இந்த படத்திற்கு பிரியாமணி வந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அனைத்து மொழிகளிலும் உச்சத்தை எட்டி உள்ளது.
இந்த படப்பிடிப்பு தற்போது புனேவில் வெகுவிரைவில் நடக்க ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.