கட் காப்பி சர்ச்சையில் அட்லி.? சர்தார், ஜவான் ஒரே கதையா.? எடிட்டர் அதிரடி பதிவு

atlee
atlee

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் வெறும் நான்கு படங்களை மட்டும் இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார் ஆனால் இவர் இயக்கிய அனைத்து படங்களும் வேறொரு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என கூறி இந்த நெடிசைன்கள் அதை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இயக்குனரின் சங்கரின் துணை இயக்குனராக சில ஆண்டுகளாக மணியாற்றி இருந்து வந்த அட்லி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் இந்த படம் காப்பி அடிக்கப்பட்ட படம் என ஒரு பக்கம் ட்ரோல் செய்தனர்.

அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மூன்று படங்களையும் தொடர்ந்து விஜயை வைத்து இயக்கியிருந்தார் இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த மூன்று படங்களுமே வெவ்வேறு படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளாக இருந்தது அதையும் ஆதாரத்தோடு ட்ரோல் செய்தனர். இப்படி தான் இயக்கம் ஒவ்வொரு படத்திலும் காப்பியடிக்கப்பட்டது எனக் கூற ஆரம்பித்து விட்டனர்.

அதன் பிறகு தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் சினிமாவிற்கு சென்ற அட்லி அங்கு ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி அன்று வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தின் கதையும் அட்லீம் ஜவான் திரைப்படத்தின் கதையும் ஒரே கதை என்று பிரபல திரைப்படம் விமர்சகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவு செய்தார். இதற்கு இந்த இரண்டு படங்களின் எடிட்டர் ரூபன் பதிலளித்துள்ளார்.

ரூபன் பதிலளித்தாவது சர்தார், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வெளியானால் மட்டும்தான் தெரியும் இரண்டும் ஒரே கதையா இல்லை வெவ்வேறு கதையா என்று என கூறியுள்ளார் எடிட்டர் ரூபன்.