மீண்டும் தளபதி விஜயுடன் இணையும் அட்லீ..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

atlee
atlee

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லீ.  இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தளபதி விஜயை வைத்து தேறி மெர்சல் பிகில் என மூன்று திரைப்படங்களை வரிசையாக இயக்கியுள்ளார்.

அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது இதனை தொடர்ந்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்த அட்லீ ராஜாராணி படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் என்ற திரைப்படத்தை போலவே இருப்பதன் காரணமாக பலரும் அட்லியை விமர்சித்து வந்தார்கள். இவ்வாறு இந்த முதல் திரைப்படத்திலேயே அட்லி பிரபல நடிகர் ஆர்யா நயன்தாரா நஸ்ரியா ஜெய் போன்றவர்களை வைத்து திரைப்படத்தை இயக்கினார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக யாரை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறார் என பலரும் காத்திருந்த நிலையில் தளபதி விஜய் மாட்டிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கிய அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்து விட்டு தற்போது பாலிவுட் பக்கம் அடி எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் மட்டும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரையும் வைத்து லயன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆனால் இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது ஷாருக்கானின் மகன் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கைது செய்யப்பட்டதன் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் நடக்க போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அட்லி தளபதியுடன் ஒரு திரைப்படத்தை பணியாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த தளபதி 66 திரைப்படத்தை வம்சி இயக்குவது மட்டும் இன்றி இதனைத் தொடர்ந்து அவருடைய 67 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தெரியவில்லை ஆனால் தளபதி 68 திரைப்படத்தை அட்லி இயக்கப் போவதாகவும் அதனை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு துவங்கும் என கூறியுள்ளார்கள்.