“அட்டகத்தி திரைப்படம்” எனக்கான படம் – தவறவிட்டது எப்படி உண்மையை உடைக்கும் நடிகர் ஜெய்.!

jai-
jai-

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ஜெய். அதன் பின் இவர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள படங்களில் நடித்து வெற்றி பெற்றார் இப்படி வெற்றியை மட்டுமே ருசித்து ஓடிக்கொண்டிருந்த நடிகர் ஜெய்க்கு..

வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தாலும் அண்மை காலமாக அவர் நடிக்கும் படங்கள் தோல்வியையே சந்திக்கின்றன. அதிலிருந்து மீண்டு வர அவரும் புதிய படங்களில் நடித்து தான் பார்க்கிறார் ஆனால் சொல்லி கொள்ளும்படி பெரிய அளவு வெற்றியை ருசிக்கவில்லை ஏன் கடைசியாக கூட இவர் நடித்த பட்டாம்பூச்சி, எண்ணி துணிக போன்ற படங்கள் வெளிவந்தாலும் பெரிய அளவு பேசப்படவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு ஒரு கட்டத்தில் நல்ல கதைகள் வந்தது ஆனால் அப்போது பல்வேறு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் பல நல்ல படங்களை இழந்திருக்கிறேன் என கூறினார். அதில் ஒன்றாக அட்டகத்தி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான் எனவும் கூறினார்.

நான் கோவா படத்தின் ஷூட்டிங்கில் இருந்த பொழுது உதவி இயக்குனராக பா ரஞ்சித் இருந்தார் அப்பொழுது அவர் என்னிடம் அட்டகத்தி படத்தின் கதையை கூறினார் அதே சமயம் நான் எங்கேயும் எப்பொழுதும் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அப்பொழுது அட்டகத்தி படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது..

பிறகு பா ரஞ்சித் அந்த கதையை தினேஷிடம் சொல்லி ஓகே பண்ணினார் நான் படத்தை பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அதிலும் சந்தோஷ் நாராயணன் இசை சூப்பராக இருந்தது அந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என கூறி புலம்பினார்.