தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களில் அடிபட்டு வந்த விஜய் ஒரு கட்டத்திற்கு மேல் யாராலும் தொட முடியாத அளவிற்கு சினிமாவில் உயர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி சினிமாவில் பல விமர்சனங்களுக்கு மத்தியில் உயர்ந்த இடத்தை பிடித்த விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி கூட்டணியில் முதன் முறையாக விஜய் அவர்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனால் வாரிசு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகிய நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க ட்ரைலரை பார்த்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே தினத்தில் மோத இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் ரசிகர்கள் அஜித்தின் துணிவு பட டிரைலரை பார்த்து விமர்சிப்பதும் அஜித் ரசிகர்கள் விஜயின் வாரிசு பட ட்ரைலரை பார்த்து விமர்சித்தும் வருகிறார்கள். இப்படி இருக்கையில் ரசிகர்களுக்கு இடையில் கோலு மூட்டிவிட்டு வேடிக்கை பார்கிறார்கள் நெட்டிசன்கள்.
இதனைத் தொடர்ந்து வாரிசு ட்ரைலரில் அமைந்துள்ள சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டது என்று கூறி ட்ரோல் செய்தும் மீம்ஸ் போட்டும் வருகிறார்கள் அந்த வகையில் தற்போது வாரிசு படம் இந்த தெலுங்கு திரைப்படத்தின் அட்ட காப்பி தான் என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு நிரூபித்து வருகிறார்கள்.
அதாவது வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியான “பிருந்தாவனம்’ மற்றும் “அஞ்ஞாதவாசி” படங்களின் சாயலில் வாரிசு இருப்பதாக நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றவர்கள். இது ஒரு பக்கம் இருக்க எவ்வளவுதான் விமர்சனங்கள் வந்தாலும் அசராமல் வாரிசு படத்தின் டிரைலர் சாதனை படைத்து வருகிறது.