விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக 7c சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுருதிஹாசனும் தங்கையாக 3 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனைத்தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு மற்ற நடிகைகளைப் போலவே சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்ததும் எதிர்பாராதவிதமாக ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். அவ்வபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இப்புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கேவலமான கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.