விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசன்களில் இருந்த போட்டியாளர்களையும் ஒன்றாக சேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் நடுவராக இருந்து நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் குக் வித் கோமாளி பிரபலமான புகழும் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.
அந்தப் ப்ரமோவில் புகழை ரம்யாகிருஷ்ணன் பயங்கர கோபமாக திட்டுவதுபோல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் கோபத்தில் திட்டுவது போல உள்ளது ஆனால் கடைசியாக அவர் பேரங்க் செய்வது போல உள்ளது.
தற்ப்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.