சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவர் முதலில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவுக்கு தங்கையாக அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பிரபலமானதன் மூலம் பின்பு இவருக்கு ஒரு முக்கிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிலையில் பாண்டியன் ஸ்டோரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்த சித்ரா நிஜத்தில் இறந்த பிறகு அவருக்கு பதில் தற்போது காவியா அறிவுமணி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சித்ரா ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவை வைத்துப் பார்க்க சற்று தயங்கினாலும் தற்போது இவரை மக்கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காவியா சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்து வருகிறார். கூடிய விரைவிலே இவர் வெள்ளி திரையிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.
மேலும் காவியா அறிவுமணி அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் உருவாகின மற்றும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
இந்த நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது மேலும் லைக்குகளையும் குவித்து வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்.