தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சின்னத்திரையில் காமெடி நடிகராகவும் சீரியலில் நடித்தும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தவர். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ரசிகர்களிடையே விஜய்சேதுபதிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் தங்களது படத்தில் ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டுமென துரத்துகின்றனர்.
சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. ஆனால் இவர் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி உள்ளதால் வெப்சீரிஸ் பக்கம் தலை வைக்க முடியவில்லையாம். இந்த நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்தால் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு அப்பாவி போல உள்ளார். அப்படி உள்ள இவரோ தற்போது சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இதோ அந்த புகைப்படம்.