Jawan Movie Budget: அட்லீ இயக்கத்தில் ஜவான் படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இந்த படத்தினை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறினார். இவ்வாறு இதனை அடுத்து தற்பொழுது இவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி தயாரித்து வரும் நிலையில் ஷாருக்கானின் கெரியரிலேயே இதுதான் பெரிய ப்ராஜெக்ட் படம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரூபாய் 300 கோடி பொருட்ச அளவில் ஜவான் படம் உருவாகி இருக்கிறதாம்.
அப்படி ஜவான் படத்தை இடம் பெற்று இருக்கும் ஷாருக்கானின் அறிமுக பாடலான Zinda Banda என்ற பாடலுக்கு மட்டும் ரூபாய் 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில் ஷாருக்கான் உடன் சேர்ந்து 1000 பேர் ஆடி உள்ளனர். மேலும் பல்வேறு நகரங்களில் இருந்து டான்ஸர்கள் வர வைத்து ஷாருக்கான் அவர்களுடன் சேர்ந்து ஆடிவுள்ளார்.
கடைசியாக பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஷாருக்கான் நடிப்பில் உலக அளவில் ரூபாய்1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது பதான் படம் இது வெறும் 250 கோடி பட்ஜெட் தான். இவ்வாறு பதான் படத்தை விட ஜவான் படம் அதிக பொருட்சளவில் உருவாகி வரும் நிலையில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அட்லீ தான் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திற்கு ரூபாய் 300 கோடி செலவு, ஒரு பாடலுக்கு ரூபாய் 15 கோடி செலவு செய்வது என்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமடைய வைத்துள்ளது. எனவே ஷங்கரின் உதவி இயக்குனர் என்பதை அட்லீ ஜவான் திரைப்படத்தின் மூலம் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.