இயக்குனர் அட்லி விஜயை வைத்து தொடர் ஹாட்டரிக் வெற்றிகளை கொடுத்த பிறகு தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ளார் அட்லி.
இந்நிலையில் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் ஜமான் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் வியாபாரத்தை பார்த்து பாலிவுட்டில் அதிர்ச்சி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருவதால் பாலிவுட் இயக்குனர்கள் சற்று ஆட்டம் கண்டுள்ளனர். ஏனென்றால் பாலிவுட்டில் பெரிய நடிகரின் படங்களை தோல்வியை சந்தித்து வருகிறது இதனால் பிண்ணுக்கு தள்ளப்பட்டதாக எண்ணி பாலிவுட் இயக்குனர்கள் படங்களை எடுக்க தயங்குகிறார்கள்.
இதுவரை தோல்வியை சந்திக்காத அட்லி முதன்முறையாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்று உள்ளார். ஷாருக்கானின் படம் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை விட டபுள் மடங்கு வியாபாரம் ஆகி உள்ளது ஜவான்.
அதாவது netflix நிறுவனம் ஜவான் படத்தை 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த மிகப்பெரிய வியாபாரத்திற்கு காரணம் அட்லி என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தளபதியை விஜயை வைத்து தொடர் ஹாட்ரிக் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி வருகிறார்.
பொன்னியின் செல்வனை விட அதிக வசூல் செய்ததால் அட்லியின் மார்க்கெட் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது மேலும் ஜவான் படத்தில் ஒரு சம்பவம் செய்து இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.