ஷாப்பிங் சென்ற இடத்தில் இடிந்துபோய் உட்கார்ந்திருக்கும் அட்லியின் மனைவி பிரியா.! காரணம் வேற யாரு நம்ம அட்லி தான்.!

தமிழ்சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன்  மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஆனால் இதற்கு முன் இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். இவர் இயக்கிய திரைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆனாலும் விமர்சனங்களையும் சந்தித்து வந்தது.  அதெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு ரெடியாகி விட்டார்.

இயக்குனர் அட்லி 2014 ஆம் ஆண்டு நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  அட்லி மற்றும் அவரின் மனைவி ப்ரியா இருவரும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அடிக்கடி தங்களுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் பதிவுகளை பதிவிடுவது ரசிகர்களிடம் வைரலாகி வரும்.

priyaatlee
priyaatlee

அப்படித்தான் சற்றுமுன் பிரியா அட்லி சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் செல்லம் சோகமா இருக்க எனக் கேட்டுள்ளார்கள்.

ஆனால் ப்ரியா அட்லி அந்த புகைப்படத்திற்கு கேப்டனாக என்னுடைய கணவர் பர்ச்சஸ் செய்ய போயுள்ளார் ஆனால் எனக்காக தான் என அந்த பதிவில் வெளியிட்டுள்ளார். பொதுவாக ஷாப்பிங் சென்றாள் மனைவிகள் மட்டும் தான் மணிக்கணக்காக சாப்பிங் செய்து கொண்டிருப்பார்கள் ஆனால் இங்கு  கொஞ்சம் வித்தியாசமாக கணவர் அதிக நேரம் ஷாப்பிங் சென்றுள்ளார்.

இதனால் மிகவும் சோகமாக அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ப்ரியா அந்த புகைப்படத்திற்கு தான் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

priyaatlee