மௌன ராகம் என்ற திரைப்படத்தை இப்பொழுது உள்ள காலக்கட்டத்திற்கு ட்ரெண்டிங்காக இயக்கி வெற்றி கண்டவர் அட்லி. அந்தத் திரைப்படத்திற்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வெற்றி பெற்றது.
ஆனால் அவர் இயக்கிய திரைப்படம் மவுனராகம் திரைப்படத்தின் கதை என பலரும் விமர்சித்தார்கள். அதுமட்டுமில்லாமல் அட்லீக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு தளபதி விஜய் உடன் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கினார் ஆனால் அந்த மூன்று திரைப்படங்களும் மற்ற திரைப்படங்களின் காப்பி என பெரும் குற்றச்சாட்டு எழுந்தது ஆனால் அதை அட்லி இசையில் எப்படி ஸ்வரங்கள் எப்படி மாற்றி மாற்றி இசையமைத்துக் கொள்கிறார்களோ அதேபோல்தான் கதையும். என ஏதேதோ கூறி கேட்பவர்களின் வாயை அடைத்தார்.
அப்படி இருக்கும் நிலையில் அட்லி திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனால் அதனை கோலிவுட் வட்டாரத்தில் அட்லியை கவனமுடன் பார்க்க வேண்டும் என கூறி வருகிறார்கள். மேலும் மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தெனண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குனர் அட்லி அவர்களை வாழ்நாளில் மறக்கவே மாட்டார்கள் அந்த அளவிற்கு வச்ச செய்துவிட்டார் அட்லி.
அட்லி இரண்டு திரைப்படங்களை தயாரிக்க மிகப்பெரிய தொகையை செலவிட்டதாகவும் ஆடம்பரமாக அவர்கள் காசில் செலவிட்டதாகவும் பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமில்லாமல் அந்தத் திரைப்படத்திற்கு அதிகம் செலவானது அந்த படத் தயாரிப்பாளர்களே பலமுறை பேட்டிகளில் கூறி இருந்தார்கள்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க முடியாமல் நடுத்தெருவிற்கு வந்துவட்டது. அதேபோல் ஏஜிஎஸ் நிறுவனம் வருடத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்களை தயாரித்து வந்த நிலையில் தற்போது எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜன் அவர்கள் ஓபனாக கூறிவிட்டார்.