சிவகார்த்திகேயனின் “டான்” படத்தை பார்த்துவிட்டு அட்லீ போட்ட ட்வீட்.! ஆச்சரியப்பட்டுப் போன படக்குழு.

atlee
atlee

நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை கண்டுவருகிறது டாக்டர் படத்தைப் போலவே இந்தப் படத்தையும் மக்கள் மன்றம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

அதனால் நிச்சயம் இந்த திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. டான் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும்  9 கோடி வசூல் செய்தது இரண்டாவது நாளில் தமிழகத்தில் நல்ல வசூல்  இரண்டு நாட்களில் 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில்  29 கோடி  தமிழ்நாட்டில் மட்டுமே  சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலங்கள் தொடங்கி பலரும் இந்த படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் அதோடு மட்டுமல்லாமல்  நடிகர் சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கியமான படமாக இது இருக்கும் என கூறிவருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில்  தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்திய இயக்குனர் அட்லீ அண்மையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் சொன்னது: டான் ஒரு எமோஷனல் ஃபேமிலி என்டர்டேய்னர் திரைப்படம்.

நடிகர் சிவகார்த்திகேயன் பர்பாமன்ஸ் சூப்பர் டா..இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு  வாழ்த்துக்கள். மாஸ்டா சிபி டைரக்டர் சார்.. உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. சிறந்த படம் எமோஷனலாக இருக்கிறது. மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள் கூறினார்  இயக்குனர் அட்லீ.