தமிழ் சினிமாவில் நாலு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்கிய நாலு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது ஆனால் இந்த நாலு படம் வேறொரு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட திரைப்படங்கள் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதாவது இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் முதல் முதலில் வெளியான ராஜா ராணி படம் மணிரத்தினத்தின் மௌன ராகம் படம் என ட்ரோல் செய்தனர்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார் இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் தளபதி விஜய்யை வைத்து இயக்கியிருந்தார்.
ஆனால் இந்த மூன்று படமும் அட்டகாபி என சொல்லி ட்ரோல் செய்யப்பட்டது தெறி படம் கேப்டன் விஜயகாந்தின் சத்ரியன் படம் எனவும், மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும், இதேபோல் பிகில் திரைப்படம் ஷாருக்கானின் சக்தே படத்தின் காப்பி என்றும் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது ஜவான் படம் கார்த்தியின் சர்தார் படத்தின் காப்பியா என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அப்பா ரா ஏஜென்ட் மகன் போலீஸ் அப்பா மீது சுமத்தப்பட பழியை துடைக்கும் மகன் செய்யும் போராட்டம் தான் இரண்டு படங்களின் கதை என்று கூறி வருகின்றனர். இந்த விஷயம் நடிகர் ஷாருக்கானுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் நெட்டிசன் கிறிஸ்டோபர் என்பவர் அந்த பதிவை போட்டு இருந்தார் இதை பார்த்த எடிட்டர் ரூபன் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன் ஆனால் எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு சொல்லலாமா என கேள்வி எழுப்பி உள்ளார் இரண்டு படங்களும் வெளியானால் தான் உண்மை என்னவென்று தெரியும் என்று பதில் அளித்துள்ளார் ரூபன்.