சிவகார்த்திகேயனை நம்ப வைத்து முதுகில் குத்திய இயக்குனர்.! அந்த சம்பவம் தான் உச்சத்திற்கு போக காரணமா.!

sivakarthileyan
sivakarthileyan

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரை நம்பி ஏமாற்றி விட்டதாக பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இதனால் பல மன வேதனைகளையும் அனுபவித்த நிலையில் தற்போது குறித்து உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஒரு கட்டத்தில் பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் இதனைப் பார்த்த ஏராளமானவர்கள் சிவகார்த்திகேயனை தங்களது படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள். அப்படி காமெடி நடிகராக அறிமுகமாகி மனங்கொத்தி பறவை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் சிவகார்த்திகேயன்.

இவ்வாறு பிரபல இயக்குனர் ஒருவர் தான் இயக்கம் பெரிய பட்ஜெட் படத்தில் உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டர் இருப்பதாகவும் அதற்காக தயாராக வேண்டும் என கூறியதால் அந்த நம்பிக்கையுடன் சிவகார்த்திகேயன் இருந்து வந்துள்ளார். எனவே மற்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் அதனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

ஆனால் அந்த இயக்குனர் இந்த படம் குறித்த அப்டேட் வெளியிடும் பொழுது மற்ற பிரபலங்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் பெயரிடம்பெறவில்லை இதன் மூலம் இந்த படத்தில் தான் இல்லை என்பதை சிவகார்த்திகேயன் தெரிந்துகொண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் காமெடியனாக நடிக்கலாம் எனக் கூறி படத்திலேயே இல்லாமல் ஆக்கிட்டாங்க.

அதாவது, அந்த இயக்குனர் வேறு யாருமில்லை இயக்குனர் அட்லீ தான் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ராஜா ராணி படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கேரக்டர் இருப்பதாக கூறி ஏமாற்றி உள்ளார். ராஜா ராணி படத்தில் நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா போன்ற பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது.

எனவே ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி பிறகு அட்லீ சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு தர மறுத்திருக்கிறார் இவ்வாறு இது குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.