மான், புலி, வேடன்.. குட்டி ஸ்டோரி சொல்லி அரங்கை அதிர வைத்த அட்லி.! ஐயோ பாவம் இந்த கதையை யாருக்கு சொல்றாரு..

jawan atlee
jawan atlee

Atlee Jawan : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வருகின்ற செப்டம்பர்  ஏழாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அட்லி பிரியாமணி பட குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய அட்லி கூறியதாவது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க யாரை தேர்வு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம் அப்பொழுது ஷாருக்கான் அவர்களிடம் கேட்ட பொழுது உங்கள் விருப்பம் என்றார் உடனே என்னுடைய டார்லிங் நயன்தாராவை கூறினேன் ஷாருக்கான் அவர்களும் ஓகே கூறிவிட்டார்.

அதன் பிறகு தான் நயன்தாராவை சந்தித்து கதையை கூறினேன் அவருக்கும் கதை பிடித்து போக ஓகே என கூறிவிட்டார் அடுத்ததாக வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது நான் உடனே விஜய் சேதுபதியை கூறினேன் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கதையை கூறினேன் கதை அவருக்கும் பிடித்து போக ஓகே என்று கூறினார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு ஹீரோ தான் எனவும் அட்லி கூறி உள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி பற்றி கூறுகையில் அவர் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்து கொண்டார் அவரை போல் எல்லோரும் அவருடன் பயணிக்கலாம் இந்த படத்தில் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பிறகு இசையமைப்பாளராக யாரை போடலாம் என பேசிக்கொண்டு இருந்த பொழுது அனிருத்தை தொடர்பு கொண்டு எனக்கு ஒரு மெட்டை போட்டுக் கொடுங்கள் என கேட்டேன் அவரும் ஒரு மெட்டை போட்டுக் கொடுத்தார் அதனை ஷாருக் அவர்களுக்கு அனுப்பினேன் அதன் பிறகு தான் சிங்க பெண்ணே சித்திரப் பூ என்ற மேட்டு உருவானது.

இப்படியே பேசிக்கொண்டிருந்த அட்லி யோகி பாபு பற்றியும் பேசினார் அப்பொழுது யோகி பாபு மீது திரையுலகில் தவறான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது அவர் கால்ஷீட் தரவில்லை என பலரும் கூறுகிறார்கள் ஆனால் அவர் சம்பளமே வாங்காமல் உதவி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் அவர்களுக்கு உதவியும் செய்கிறார் என பேசினார். இப்படி பேசிவிட்டு அட்லி ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார் அதாவது அவர் கூறியதாவது மான் ஓன்று குட்டியை பிரசவிக்கும் தருணத்தில் காட்டில் பிரசவம் செய்வதற்காக சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டிருந்தது ஒரு பக்கம் நீரோடை மற்றொரு பக்கம் முள் புதர் இதுதான் சரியான இடம் என தேர்வு செய்து முடிவு செய்தது அந்த சமயத்தில் மானிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

குட்டி பிறக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த மானுக்கு மேகம் கருத்து மழை வரும் என்ற அறிகுறியும் தென்பட்டது அந்த மானின் வலது பக்கத்தில் ஒரு புலி வேட்டையாடுவதற்கு மானையே பார்த்துக் கொண்டிருக்கிறது அப்பொழுது அந்த மான் யோசித்துக் கொண்டிருக்கிறது நம்மை மட்டும் திங்காமல் நமது குட்டியையும் தின்றுவிடும் என இடது பக்கம் திரும்பி பார்த்தது அங்கு ஒரு வேடன் வில்லில் அம்பை பொறுத்திக் கொண்டிருக்கிறான் இந்த நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து கண்ணை மூடி திறந்தது.

கண்ணை மூடுவதற்கு முன் ஒரு விஷயம் நடந்தது மேகம் கருத்து இடி இடித்தது அப்பொழுது மரம் தீ பற்றி எரிந்தது ஒரு பக்கம் புலி மற்றொரு பக்கம் வேடன் மறுபடியும் ஒரு இடி இடித்தது அந்த அதிர்ச்சியில் வேடன் அம்பை எறிந்தான் அது புலி மீது பாய்ந்தது மழை பெய்து காட்டு தீயும்  அணைந்தது இப்படி உங்களை சுற்றி ஆயிரம் ஆற்றல்கள் இருந்தாலும் உங்களுடைய கவனம் எப்பொழுதும் பணியில் மட்டுமே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்னுடைய வெற்றியின் ரகசியம் என் மனைவி தான் அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு தான் எந்த ஒரு விஷயத்திலும் ஒப்பிட இயலாது எனக் கூறியுள்ளார்.