முதன்முறையாக தன்னுடைய மகனின் பெயரை அறிவித்த பிரியா அட்லி ஜோடி.! வைரலாகும் புகைப்படம்.!

atlee
atlee

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் அட்லி இவர் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி கண்டது, அதனால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் அட்லி அவர்கள் ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார் அட்லீ இயக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்தை சந்தித்தது அதாவது அட்லீ இயக்கும் திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களின் காப்பி என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

ஆனால் அதற்கும் அட்லி அவர்கள் ஸ்வரங்கள் ஏழுதான் அதனை தான் மாற்றி மாற்றி இசை அமைக்கிறார்கள் அதேபோல்தான் இதுவும் எனக் கூறி அனைவரின் வாயை மூட வைத்தார். இந்த நிலையில் அட்லி தற்பொழுது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது அட்லீ அவர்கள் பிரியா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது இந்த தம்பதிகளின் குழந்தைகளை ஷாருக்கான் உட்பட பல சினிமா பிரபலங்கள் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து கூறினார்கள்.

இந்த நிலையில் பிரியா மற்றும் அட்லி தம்பதிகள் தங்களுடைய மகனின் பெயரை முதன்முறையாக அறிவித்துள்ளார்கள் மீர் என தன்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள், இதை பார்த்த பல சினிமா பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

atlee priya
atlee priya