அடுத்தவங்க காசுகளில் மங்களம் பாடிய உனக்கு, உன்னோட காசு என்றதும் வலிக்குதா.! அட்லீயை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

atlee
atlee

atlee produce next movie.? இயக்குனர் அட்லி மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டார், இவர் இயக்கும் திரைப்படங்கள் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடுகின்றன, இந்த நிலையில் அட்லி விஜயை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கி விட்டார்.

மேலும் அட்லி அடுத்ததாக பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஷாருக்கான் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருவதால் மிகவும் பிசியாக இருக்கிறார், அதனால் ஷாருக்கான் படம் இப்போதைக்கு கிடையாது என்ற நிலைமை வந்து விட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தின் ரீமேக்கில் பணியாற்ற இருந்தார் ஆனால் அந்த திரைப்படமும் என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்பொழுது அட்லி எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தனித்து நிற்கிறார் அதனால் மீண்டும் விஜயை வைத்து படத்தை இயக்க விஜயிடம் சென்றுள்ளார்.

ஆனால் விஜய் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருக்கிறார் அதனால் கண்டிப்பாக அட்லி இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க மாட்டார் என உறுதியாகியுள்ளது அதுமட்டுமில்லாமல் விஜய் புதிய இயக்குனருடன் படம் செய்ய ஆசைப்படுவதாக விஜய் நட்பு வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.

அட்லி இதற்குமுன் மெர்சல் திரைப்படத்தை இயக்கிவிட்டு மீண்டும் விஜயிடமே பட வாய்ப்புக்காக சென்றுள்ளார் ஆனால் விஜய்யோ வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து விட்டு வாருங்கள் பிறகு ஒரு திரைப்படம் செய்யலாம் என கூறி அனுப்பினார் ஆனால் அட்லி அங்குமிஙகும் அலைந்து பார்த்துவிட்டு திரும்பவும் விஜய்யிடமே பட வாய்ப்புக்காக சென்றுள்ளார் அதன் பிறகுதான் பிகில் திரைப்படம் உருவானது.

அப்படியிருக்க கண்டிப்பாக இந்த முறை அட்லிக்கு வாய்ப்பு விஜய் தர மாட்டார் என தெரிகிறது, அதனால் அட்லி தானே ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என யோசித்து வருகிறாராம், அதற்காக ஜெயம் ரவியிடம் அணுகியுள்ளார் அட்லி, ஆனால் அட்லீ படத்தை தயாரிப்பது சாத்தியமில்லை என பலரும் கூறுகிறார்கள்.

ஏனென்றால் பல தயாரிப்பாளர்களின் தலையில் துண்டை போட வைத்த அட்லீ படத்தை தயாரித்து தன்னுடைய தலையிலேயே துண்டைப் போட்டுக் கொள்வாரா என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் படத்தை இயக்கிய அட்லி தயாரிப்பாளரின் செலவில் தன்னுடைய மனைவியையும் அழைத்து சென்று அதிக செலவில் விட்டுவிடுவார், அதுமட்டுமில்லாமல் குறித்த பட்ஜெட்டை விட அதிக செலவில் இழுத்து விட்டு தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அட்லி இயக்கிய ஒவ்வொரு திரைப்படத்திலும் கூறப்பட்டது, அதனால் அட்லி வைத்து இனி யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அடுத்தவன் காசில் மங்களம் பாடி அட்லிக்கு சொந்த காசு என்றவுடன் படத்தை தயாரிக்க யோசித்து வருகிறாராம்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அடுத்தவன் காசை தண்ணி போல் கரைத்தாயே உன் காசு என்றதும் வலிக்கத்தான் செய்யும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.