அடங்காமல் மீண்டும் அதே தவறை செய்த அட்லி.! விஜயகாந்த் படத்தை காப்பி பேஸ்ட் பண்ணியதால் வந்த விபரீதம்.!

atlee jawan issue

Jawan Atlee Kumar : தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் இயக்குனர் அட்லி, இவர் முதன் முதலில் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய் அவர்களை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார் ஆனால் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் மற்ற திரைப்படத்தின் தழுவுகளாக இருந்தது.

அதனால் இவர் மீது அதிக விமர்சனம் எழுந்தது ஆனால் அதை எதையும் காதில் வாங்காமல் மீண்டும் காப்பி அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் இயக்குனர் அட்லி. இந்த நிலையில் தற்பொழுது அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் மனைவியுமான நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அட்லியின் நடவடிக்கை தெரிந்து ஷாருக்கான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் படத்தை பார்த்தால் தான் தெரியும் என அனைவரும் அமைதியாக இருந்தார்கள். மேலும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி நடித்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது முதன்முறையாக பாலிவுட்டில் முதன் முறையாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

வழக்கம்போல் ஜவான் திரைப்படத்திலும் தன்னுடைய வேலையை காட்டி உள்ளார் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பேரரசு திரைப்படத்தின் காப்பி என விஜயகாந்த் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே அட்லீ மீது ஒரு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு விளக்கமும் ஜவான் திரைப்படத்தின் பட குழுவிடம் இருந்து வெளியாகவில்லை.

அப்படி இருக்க திடீரென விஜயகாந்த் படத்தின் தயாரிப்பாளர் அதிரடி முடிவை எடுத்துள்ளார் அதாவது ஜவான் திரைப்பட குழுவிடம் நஷ்ட ஈடு கேட்டு விஜயகாந்த் பட தயாரிப்பாளர் பிரச்சனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அட்லி பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்கும் திமிரில் எந்த ஒரு ரெஸ்பான்சும் தராமல் இருக்கிறாராம் இதனால் கடுப்பான தயாரிப்பாளர் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி தான் வெளியாக இருக்கிறது அதற்குள் ஆகஸ்ட் 25ஆம் தேதி பேரரசு படத்தை வெளியிட விஜயகாந்த் பட தயாரிப்பாளர் முடிவு எடுத்துள்ளார் இது அட்லீயின் முகத்திரையை கிழிப்பதற்காக இப்படி ஒரு செயலை செய்ய இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

atlee jawan
atlee jawan