“ஜவான்” படத்திலேயும் ஒரு ரோலக்ஸ்.. சீக்ரெட்டாக வைத்திருக்கும் அட்லீ

jawan
jawan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக காணப்பட்டவர்  அட்லீ.. இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த காரணத்தினால் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவர்..  அட்லீ தற்பொழுது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வைத்து “ஜவான்” என்னும் படத்தை எடுத்து வருகிறார்..

இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சானியா மல்கோத்ரா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றன படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சிறப்பான தகவல் வெளியாகி உள்ளது அதாவது விக்ரம் படத்தில் எப்படி சூர்யா கடைசி நேரத்தில் வந்து “ரோலக்ஸ்” கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டு போனாரோ.. அதேபோல ஜவான் படத்திலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் போன்று மாஸான ஒரு கதாபாத்திரம் இருக்கிறதாம்.

அதில் தான் தளபதி விஜய் நடிக்கிறார் என்று தகவல் ஏற்கனவே வெளியானது ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜவான் படத்தில் விஜய் நடிக்கவே இல்லையாம்.. அவருக்கு பதிலாக தான் தெலுங்கு டாப் ஹீரோ புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க பல கோடி கொடுத்து படக்குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இவர் இணையும் பட்சத்தில் ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் அதிகரிக்கும், மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் மார்க்கெட் அதிகரிக்கும்  எனக் கூறி ரசிகர்கள் சொல்லி கமெண்ட் அடித்து வருகின்றனர்.