2023 ஆம் ஆண்டு என்பதால் 23 படத்தை காப்பி அடித்தாராஅட்லி.? ஜவான் உலக மகா காப்பிடா சாமி.

atlee jawan review
atlee jawan review

Jawan Review : தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லி அவர் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார் இப்படி மிகக் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் விஜய் வைத்து இயக்கியதால் இவர் மீது தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வந்தது.

அதன் விளைவாக பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்து ஷாருக்கான் அவர்களிடம் கதை கூறியுள்ளார் ஷாருக்கான் கதை பிடித்து போக படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து ஜவான் என்ற திரைப்படம் உருவானது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைத்தார் அது மட்டும் இல்லாமல் அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவானது.

ஜவான் திரைப்படத்தில் சஞ்சய் கேமியா ரோலில் மிரட்டியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார் தந்தை மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் மேலும் ஜவான் திரைப்படம் அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தின் கதையை மையமாக வைத்து எடுத்துள்ளார்கள் என சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ரிவீவ் ஒன்றை பிரபல சேனல் ஒன்று எடுத்துள்ளது அதில் பேசிய இருவர் ஜவான் முழுக்க முழுக்க காபி திரைப்படம் தமிழில் 23 திரைப்படங்களை காப்பி அடித்து அட்லி எடுத்துள்ளார், இதுவும் ஒரு திறமை தான். 1985 இல் இருந்து 2023 வரை அனைத்து திரைப்படங்களையும் காப்பி அடித்துள்ளார் என கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சீனையும் பார்க்கும் பொழுது அட இந்த சீனா இது அந்த திரைப்படத்தில் வருமே டா என திரையரங்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தான் மிச்சம். அந்த அளவு ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து சுட்டுள்ளார் இதில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆன விஷயம் என்னவென்றால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை  கூட விட்டுவைக்கல என இருவரும் கூறியுள்ளார்கள்.

அட்லி காப்பி அடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த அளவுக்கு இறங்கி பல திரைப்படங்களை காப்பி அடித்து இருப்பார் என்பது படத்தை பார்த்த பலருக்கும் தெரியும் என அவர்கள் விரக்தியில் கூறியுள்ளார்கள்.