Priyamani : நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர். ஆரம்ப காலகட்டத்தில் ப்ரியாமணி பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தமிழ்ழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் அட்லி நடிப்பில் உருவாகிய ஜவான் திரைப்படத்தில் தான் பிரியாமணி நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது, அட்லி இதற்கு முன்பு விஜயின் மூன்று திரைப்படங்களை இயக்கியவர்.
ஒவ்வொரு திரைப்படமும் வேறொரு திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூறிவந்த நிலையில் பல மேடைகளில் விஜய் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் அட்லி, இதன் நிலையில் விஜய் ஜவான் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதே எதிர்பார்ப்பில் தான் நடிகை பிரியாமணி அவர்களும் இருந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ப்ரியாமணி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதாவது ஷூட்டிங் ஆரம்பகாலகட்டத்தில் தமிழ் சார்பாக விஜயும் தெலுங்கு சார்பாக அல்லு அர்ஜுனும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதை நம்பி பிரியாமணி அவர்களும் அட்லீ அவர்களிடம் சென்று விஜய் நடிக்கிறார் என்றால் அவருடன் எனக்கு ஒரு சிறிய ரோளாவது கொடுங்கள் என வாய்ப்பு கேட்டுள்ளார்.
உடனே அட்லி அதற்கென்ன பேஷா பண்ணிடலாமே எனக் கூறியுள்ளார் ஆனால் கடைசி வரை அது நிறைவேறாமல் போனது அதனால் அட்லீமீது செம காண்டில் இருந்துள்ளார் பிரியாமணி.