Atlee Kumar: ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்து வரும் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் அம்பானி வீட்டிற்கு சென்றுள்ளார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்ததால் இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து பிளாக் பாஸ்டர் ஹிட் திரைப்படங்களை தந்து வந்தார். இவ்வாறு தொடர் வெற்றிகளை தொடர்ந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி ஷாருக்கான், நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் திரைப்படத்தினை பல கோடி பட்ஜெட் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.
இந்த படத்தினை ஷாருக் கானின் மனைவி தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படம் கலவை விமர்சனங்களை பெற்றாலும் இதுவரையிலும் 880 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஜவான் படமும் காப்பி என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளது அப்படி ரசிகர்கள் ஏராளமான காட்சிகளை ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் வசூல் ரீதியாக ஜவான் படம் வெற்றி பெற்றதனை தொடர்ந்து அட்லீ அடுத்தடுத்து ஹிந்தி படங்களை இயக்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை முன்னிட்டு அட்லீ தனது மனைவி பிரியாவுடன் முகேஷ் அம்பானி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ அம்பானி வீட்டிற்குள்ளே நுழைந்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.