அட்லீ ஷாருக்கான் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

atlee 1
atlee 1

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் மற்ற இயக்குனர்கள் போல் பிரபலமடைய மிகவும்  பல வருடங்களாக அல்லது சில வருடங்கள் என ஆகவில்லை தனது முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்து பிரபலமடைந்தார்.

இவர் இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு ஆல்பம் திரைப்படங்களையும் இயக்கி வந்தார். இதன்மூலம் பலவற்றை கற்றுக் கொண்டு தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார் அந்த வகையில் முதன் முறையாக ஆர்யா-நயன்தாரா என பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து இயக்கிய திரைப்படம் ராஜா ராணி.

அட்லி இயக்கிய முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த வகையில் ராஜா ராணி திரைப்படம் வெளிவந்ததும் அப்பொழுது உள்ள இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தது எனவே அட்லி ரசிகர்களின் பேவரைட் இயக்குநராக மாறினார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு வெற்றிகரமான பயணம் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் தொடர்ந்து விஜய்யும் மூன்று படங்களை இவர்தான் இயக்கினார். அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் என இந்த மூன்று ஹிட் படத்தையும்  கொடுத்தார்.

எனவே விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி சிறப்பாக அமைந்ததால் ரசிகர்களும் இவர்கள் இனிமேல் எப்பொழுது இணைவார்கள் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் அட்லி இன்னும் மூன்று வருடத்திற்கு கோலிவுட்டு கிடையாது என்று கூறியுள்ளார்.

atlee
atlee

அந்தவகையில் அட்லீ ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். பாலிவுட்டில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும்  ஷாருக்கானும் அட்லீயும் முதன்முறையாக கைகோர்க்க உள்ளார்கள்.  எனவே இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாக கூறி உள்ளார்கள்.