தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் இயக்குனர் அட்லி. இவர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நயன்தாரா ஜெய் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
தான் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் அடுத்ததாக தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார் அதனைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது ஷாருக் கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தை அட்லி அவர்கள் இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. என்னதான் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்தாலும் மனைவியுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரியா அட்லி அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது அட்லி அவர்கள் ப்ரியா அவர்களுக்கு முத்தமிட்டு ஹேப்பி சண்டே என்று கேப்ஷனுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.