Thalapathy Vijay: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது கோலிவுட்டியில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவர் குறித்து நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
விஜய் குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இந்த படம் படும் தோல்வியினை சந்தித்தது.
எனவே இதனை அடுத்து தன்னுடைய விடா முயற்சியினால் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படி ஒரு கட்டத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வந்தது. இவ்வாறு சாதாரணமான படங்களில் நடித்து வந்த விஜய் பிறகு கமர்சியல் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார்.
அப்படி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முன்னணி இயக்குனர்கள் அவர்களின் இந்த வெற்றிக்கு தளபதி விஜய் தான் காரணம் எனக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் நடித்திருக்கவே கூடாது எனவும் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. எனவே இது குறித்து பேசிய நெல்சன் தளபதி விஜய் தனக்கு கொடுத்த தைரியத்தை பற்றி கூறியுள்ளார்.
அதாவது, தளபதி விஜய் பீஸ்ட் படம் தோல்வியினால் நான் சோகமடைவேன் என அறிந்து அடிக்கடி நான் என்ன செய்கிறேன் என கவனித்துக் கொண்டே இருப்பார். அவரே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கால், மெசேஜ் மூலம் என்னை தொடர்பு கொள்வார். அப்பொழுது அவர் நீ வேணும்னா பாரு நீ எடுக்கிற அடுத்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என என்னை உற்சாகப்படுத்தினார். விமர்சனங்கள் அப்படித்தான் வரும் சரியாகிவிடும் உன்னோட அடுத்த படம் ஹிட் ஆகும் பாரு என சொல்வாராம். மேலும் VTV கணேசிடம் கூட நெல்சனின் அடுத்த படம் கண்டிப்பா வெற்றி படமாக அமையும் என தளபதி விஜய் கூறியதாக நெல்சன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அட்லி, அவர் கொடுத்த நம்பிக்கையை கம்போர்ட் சூனை விட்டு வெளியே வர வைத்தது. ஷாருக்கான் உடன் படம் பண்ண விரும்புகிறார் என அழைத்து வந்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீ என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படத்தை பண்ணு என்று விஜய் அண்ணா தான் சொன்னாரு என தளபதி விஜய் குறித்து அட்லி கூறி உள்ளார்.