தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர் இவர் இயக்கத்தில் உருவாகி நண்பன் எந்திரன் ஆகிய திரைப்படங்கலில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லி முதன்முதலாக நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவின் காதல் முறிவுக்கு பிறகு ராஜா ராணி திரைப்படத்தில் தான் ரீஎன்ட்ரீ கொடுத்தார் இவருக்கு ராஜா ராணி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நயன்தாராவை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க ஆரம்பித்தார்கள் நான்கு திரைப்படங்களை இயக்கி விட்டு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தாலும் அட்லி இயக்கிய திரைப்படங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து தான் வருகிறது.
அட்லி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்தின் கதைகள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இருந்து சுடப்பட்ட கதையாக இருக்கிறது. என பலரும் குற்றம்சாட்டி வந்தார்கள். அந்தவகையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ,மோகன், நடிகை ரேவதி ,ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் மௌனராகம் இந்த திரைப்படத்தின் கதையை சுட்டு தான் ராஜா ராணி என்ற திரைப்படத்தை அட்லி இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார் இந்தத் திரைப்படமும் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய சத்திரியன் திரைப்படத்தின் கதை என கண்டுபிடித்து ரசிகர்கள் கண்டமேனிக்கு அட்லியை கழுவி ஊற்றினார்கள்.. இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் என்ற திரைப்படத்தை இயக்கினார் மெர்சல் திரைப்படமும் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் கதை தான் என கூறி அட்லீ விமர்சனம் செய்தார்கள்.
இப்படி தொடர்ந்து ஏதாவது ஒரு திரைப்படத்தின் கதையை சுட்டு எடுத்து வந்த அட்லியை விமர்சனம் செய்த பொழுது முதன்முறையாக விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார் அதாவது இசையில் ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது அதுபோல் தான் படத்தின் கதை. பலரும் அனைத்து கதையும் எடுத்துவிட்டார்கள் அதில் இருந்து கொஞ்சம் மாற்றம் செய்து தான் இதுபோல் கதையை இயக்கி வருகிறேன் என தன் பக்கம் இருந்த தவறை நியாயப்படுத்தி பேசினார்.
இப்படி கதைகளை மட்டும் சுட்டு வந்த அட்லி சமீபகாலமாக படத்தின் காட்சிகளை அப்படியே சுட்டு எடுக்க ஆரம்பித்தார். பல இயக்குனர்கள் சொந்தமாக யோசித்து படத்தை இயக்கி ஹிட் கொடுப்பார்கள் ஆனால் அவர்களெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அட்லி பில்டப் கொடுத்து விடுவார். அந்தவகையில் மெர்சல் பிகில் திரைப்படமும் ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் இருப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படி அட்லி இயக்கிய 4 படங்களுமே மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது இந்த நிலையில் இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதற்கு இடையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களை சந்தித்துள்ளார் அட்லி. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் அல்ல அர்ஜுனன் அட்லீயிடம் கதை கேட்டுள்ளார் கதை பிடித்துவிட்டது உடனே அட்லி இந்த படத்தை இயக்க வேண்டுமென்றால் 35 கோடி சம்பளமாக வேண்டுமென கிடுக்கிப்பிடி போட்டார் உடனே அல்லு அர்ஜுன் நீயும் உன் கதையும் அந்த அளவு ஒரத் கிடையாது என மூஞ்சியில் அடித்தது போல் கூறி அட்லியை அங்கே இருந்து விரட்டி விட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.