Athulya Ravi to hit fans in half saree photos: அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு அடுத்ததாக ஏமாளி, நாகேஷின் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 என மேலும் பல திரைப்படங்கள் நடித்து அசத்தி வருகிறார். இவர் இன்றுள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். அதிலும் அவருடைய கண் அழகுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் ஒன்பது திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.மேலும் கேப்மாரி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஜெய்யுடன் நடித்து வருகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரை கிளாமராக நடிக்க அழைத்துள்ளார்கள். ஆனால் இவர் கிராமத்துப் பெண் ஆவார். எனவே நான் அம்மா அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என அனுப்பிவிட்டாராம்.
தற்பொழுது தமிழ் புத்தாண்டின் போது அசல் கிராமத்து பெண்ணை போலவே புகைப்படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.