தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதனைத் தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் கண் கட்டுதே திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
மேலும் அதுல்யா ரவி சுட்டுப்பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி நாடோடிகள் 2, என நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் குடும்ப கதாபாத்திரம் போல் உடை அணிந்து நடிப்பார் ஆனால் ஏமாளி திரைப்படத்திலும் கேப்மாரி திரைப்படத்திலும் கொஞ்சம் கவர்ச்சிகரமாக கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் கேப் மாரி திரை படத்தில் ஜெய்யுடன் இணைந்து கமர்சியல் நடிகையாகவே நடித்தார்.
தற்பொழுது இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை இவர் கையில் இருப்பது முருங்கைக்காய் சிப்ஸ், மற்றும் வட்டம் திரைப்படம் தான். எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை படித்துவிட வேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் பிங்க் நிற உடையில் பார்ப்பவர்களை கண்ணை மூட வைக்கும் வகையில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இந்த புகழ் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் மானே தேனே பொன்மானே என வர்ணித்து வருகிறார்கள்.