தற்பொழுது எல்லாம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல் போன்றவற்றிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்தவகையில் டிக் டாக்கில் டப்ஸ்மாஷ் செய்வது மற்றும் குறும்படங்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன் பிறகு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது இதன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார்.
அந்த வகையில் ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு மற்றும் கேப்மாரி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெற வில்லை இருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தெரியவில்லை என்றும் சரியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் செய்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இவர் நடிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை அமோக வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படமொன்றில் அதுல்யா ரவியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். இப்படிப்பட்ட நிலையில் அதுல்யா நடராஜ்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்து அனுப்பிவிட்டாராம் தற்பொழுது இவருக்கு பதிலாக காளி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷில்பா மஞ்சுநாதன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.