பக்கா கிராமத்தானாக நடிக்கும் அதர்வா – வெளிவந்த “பட்டத்து அரசன்” படத்தின் போஸ்டர்..!

pattathu arasan

முரளியின் மகன் அதர்வா தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் முதலில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி, இரும்பு குதிரை, ஈட்டி, இமைக்கா நொடிகள்,100, குறுதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார். இவர் கடைசியாக நடித்த ட்ரிக்கர் படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அதர்வா நிறங்கள் மூன்று, அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அதர்வா மற்றொரு புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அதர்வா இயக்குனர் சற்குணம் உடன் கைகோர்த்து பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இவருடன் கைகோர்த்து ராஜ்கிரனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். சண்டி வீரன் படத்திற்கு பிறகு ஒரு கிராமத்து  ஹீரோ கதையில் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டத்து அரசன் படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் கிராமத்து ரோலில் இருக்கின்றனர். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பட்டத்து அரசன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய போஸ்டரை..

pattathu arasan
pattathu arasan