இந்த வருடம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு நல்ல வருடமாக அமைந்துள்ளது ஏனென்றால் இந்த வருடம் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் அந்த வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி செண்டிமெண்ட் காதல் என அனைத்தும் கலந்த ஒரு படம் அதுவும் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இருந்ததால் 18 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருப்பவர்கள் தான் இந்த படத்தை அதிகம் பார்க்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது இந்த படம் தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், இவானா, ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது படம் தமிழ் நாட்டையும் தாண்டி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்று வருகிறது முதல் நாளிலேயே நான்கு கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் தான் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் வெளிவந்து ஏழு நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தற்பொழுது நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே லவ் டுடே திரைப்படம் 28 கோடி வசூலித்திருக்கிறதாம்..
வருகின்ற நாட்களிலும் லவ் டுடே திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இதனால் பிரதீப் ரங்கநாதன் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கும் ஒரு கதை சொல்லி இருக்கிறார் மேலும் அவர் கையில் நான்கு ஐந்து கதைகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.