தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்யும் அந்த வகையில் இந்த வருடத்தில் பல படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்ற நிலையில் அதிக வசூலை அள்ளி திரைப்படங்கள் என்றால் விக்ரம் திரைப்படம் இருக்கிறது.
அதனை தொடர்ந்து தற்பொழுது வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது பொன்னியின் செல்வன் படம். மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருக்கிறார் படம் நீளமாக இருக்கின்ற காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சாரா அர்ஜுன், ஜெயராம், பார்த்திபன், ஜெயசித்ரா, அஸ்வின், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், மாஸ்டர் ராகவன், ரகுமான், பாபு ஆண்டனி..
மற்றும் லால், நாசர், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், விஜயகுமார் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். படத்தை பார்த்த அனைவரும் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் குறிப்பாக ரசிகர்களும் மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்களே இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை..
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை 300 கோடி எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்தினமும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் வருகின்ற நாட்களிலும் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறையாது என கணக்கிடப்பட்டுள்ளது..