திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் தோல்வியை சந்தித்து இருப்பார்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியையும் அவர்களே கண்டுபிடித்து விடுவார்கள் அந்த வகையில் தான் நடிகர் சிம்பு தோல்வியிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.
காட்டுப் பசியில் இருக்கிறார் தற்பொழுது நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையும் வெளிகாட்டி வருகிறார் அதன் காரணமாகவே அவரது ஒவ்வொரு படங்களும் வெற்றி பெறுகின்றன அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் ஐசரி கணேஷ் தயாரித்தார். படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடுகிறது அதேசமயம் இந்த படத்தில் சிம்பு நடிப்பு அபாரமாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் சிம்பு 18 வயது பையனாக நடித்தது வேற லெவல் என சொல்லி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், neeraj madhav, kayadu lohar, siddhi idnani மற்றும் பலர் நடித்து அசத்தினர். இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெறுவதன் காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்குகிறது. படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவில் மட்டுமே தமிழகத்தில் சுமார் 37 கோடி வரை..
வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது அதனால் நிச்சயம் இந்த படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.. தற்பொழுது படக்குழு வெற்றியை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.