32 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் அள்ளிய மொத்த வசூல்..

ponniyin selvan
ponniyin selvan

வரலாற்று கதைகள் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க கல்கி எழுதிய   செல்வன் நாவலை மையப்படுத்தி தான் படமாக உருவாகியிருந்தது.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார். அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர்.

படம்  நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக ரசிகர்களையும் தாண்டி இந்த படத்தை வயதானவர்களும் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல வசூலும் நாளுக்கு நாள்  வசூல் அதிகரித்து வண்ணமே இருக்கிறது.  500 கோடி பொருள் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார்.

ஆனால் முதல் பாகம் வெளியாகி தற்பொழுது நல்ல வசூலை கண்டுள்ளது 32 நாள் முடிவில் மட்டுமே இந்த திரைப்படம் 500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தை எதிர்த்து  பல்வேறு புதிய திரைப்படங்கள் வெளியாகினாலும் இந்த படத்தின் வசூல் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது.

அந்த காரணத்தினால் தான் 30 நாட்களைக் கடந்த பிறகும் OTT தளத்தில் வெளியாகாமல் இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடை கண்டு வருகிறது ஆனால் வெகு விரைவிலேயே OTT தளத்திலும் பொன்னியின் செல்வன் கால் தடம் பதித்து பல புதிய சாதனைகளை படைக்கும் என கூறப்படுகிறது..