சினிமா உலகைப் பொறுத்தவரை கிளாமர் நடிகைகள் ஆட்சி செய்தாலும் அதை ஒரு பக்கம் உடைத்தெறிந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏனென்றால் இவர் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் அழகு எல்லாம் கிடையாது ஆனால் தனது திறமையின் மூலம் தற்போது தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோயின், அக்கா, தங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தைரியமாக ஏற்று நடித்து வெற்றி கண்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது கூட இவரது கையில் பல்வேறு படங்கள் இருப்பதால் 2022-ம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஆரம்ப காலகட்டத்தில் பட்ட சில துயரங்களான விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில தகவல்களை அவர் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது எனக்கு பண்ணையாரும், பத்மினியும் படத்தில் பொழுதுதான் எனக்கு கேரவன் கிடைத்தது.
அது முன்னாடியே பல படங்களில் நடித்து இருந்தேன் ஆனால் அப்பொழுது எனக்கு கேரவன் கொடுக்கல. அதுக்காக நான் வருத்தப் பட்டது கிடையாது. காக்கா முட்டை படத்தில் நடிக்கும்போது அந்த ஏரியாவுல சின்னதாக ஒரு லாட்ஜி இருந்தது அதில் ஒரே ஒரு ரூம்ல தான் எல்லோருமே தங்கியிருந்தோம் அதேமாதிரி ரம்மி படத்தில் கேரவன் இல்லை.
அந்த படத்துல கூட கூடை மேல கூட வச்சு பாடலுக்கு எடுக்கும்பொழுது லொகேஷன் எல்லாமே பாறையை தான் இருக்கும் அங்கெல்லாம் பெட் போட்டு வண்டியில் தான் காஸ்ட்யூம் மாத்தினோம் இதுல கழிவறை பிரச்சனை தான் பெரிய தலைவலியாக இருக்கும் அதனாலேயே நாங்கள் தண்ணி குடிக்க மாட்டோம் ஆனால் இப்போ இருக்கும் நிலைமை மாறிவிட்டது.
தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்ல வசதிகளை செய்து படத்தில் நடிக்க வைத்து அழகு பார்க்கின்றனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அஜித் சார், விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா யாரும் கூப்பிடல என கூறினார்.