தமிழ் சினிமாவில் 90களில் இருந்து காமெடி நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் கவுண்டமணி காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொதுவாக 90களில் வெளியான திரைப்படங்களில் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்கள் இருவரின் காம்போ என்றால் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அதுமட்டுமல்லாமல் 90களில் கவுண்டமணி நடிக்கிறார் என்றாலே அந்த படம் வெற்றி தான் என்ற அளவிற்கு உச்சத்தில் இருந்தார்.
தற்போது இருக்கும் காமெடி நடிகர்களை விட கவுண்டமணி, செந்தில்க்குதான் மௌஸ் அதிகம். கதாநாயகனுக்காகவும் கதைக்கவும் திரையரங்கில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வரும் நிலையில் அந்த காலகட்டத்தில் இவருடைய காமெடிக்காகவே கூட்டம் கூட்டமாக பல மக்கள் சேர்ந்து போய் பார்த்தனர்.
அப்படி ரசிகர்களையும் சிரிக்க வைத்து படத்தில் நடிக்கும் நடிகர்களையும் சிரிக்க வைத்து வந்த கவுண்டமணி கடந்த ஆறு வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்த கவுண்டமணி தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளாராம்.
83 வயதாகும் கவுண்டமணி தற்போது கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன் சில இயக்குனர்கள் கட்டாயப்படுத்தி கேட்டதால் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு 49 ஓ என்ற படத்திலும் நடித்தார். அதன்பிறகு வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த கவுண்டமணி தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பதும் ரசிகர்கள் அந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதாவது பேயை காணும் என்ற படத்தின் இயக்குனரான செல்வ அன்பரசன் அவர்கள் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் தற்போது கதாநாயகனாக நடிக்கிறார் கவுண்டமணி. இந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் நடிகர் கவுண்டமணி இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் கவுண்டமணி ஒரு ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்க உள்ளாராம் மேலும் இந்த படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருபதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் மதுரையில் தொடங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.