தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடையலாம் ஆனால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளும் இருக்கிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்த நடிகை தான் கனகா.
இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கால் வைத்தாலும் இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்ததால் வேறு எந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க வில்லை மற்ற நடிகைகளைப் போலவே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் இவரை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது நடிகை கனகாவிற்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளதாம் இதனை அவரே ஒரு வீடியோவில் கூறியதாகவும் இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இதில் இந்த வயதில் நான் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டாலும் இப்பொழுது உள்ள நடிகைகள் எப்படி நடிக்கிறார்கள்,எப்படி நடனமாடுகிறார்கள் என்பதைப் பற்றி நான் தெரிந்து கொண்டால் மட்டுமே மீண்டும் நடிக்க வரலாம்.
இருந்தாலும் ரசிகர்கள் நான் மீண்டும் நடிக்க வந்தால் நல்ல வரவேற்பு தருவார்களா என அந்த வீடியோவில் கூறியுள்ளாராம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் மீண்டும் நடிக்க வந்தால் நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்போம் என கூறி வருகிறார்கள்.