48 வயதில் “நடிகை நக்மாவுக்கு” வந்த கல்யாண ஆசை.? இதை முன்னாடியே சொல்லி இருந்தா பசங்க படையெடுத்து இருப்பாங்களே..

Nagma
Nagma

Nagma : 80,  90 காலகட்டங்களில் பேரையும், புகழையும் அடைந்த பல நடிகைகள் இப்பொழுது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளவர் தான் நடிகை நக்மா. இவர் முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்தார் தமிழில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார்.

முதல் படத்திலிருந்து அழகையும், திறமையையும் காட்டி  பிரபலமடைந்தார் மேலும் இந்த படத்திற்காக பல விருதுகளையும் தட்டி தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தமிழில் ரஜினியின் பாஷா, சரத்குமாரின் ரகசிய போலீஸ், சத்யராஜின் வில்லாதி வில்லன், கார்த்திக் உடன் பிஸ்தா, மீண்டும் பிரபுதேவா உடன் லவ் பேர்ட்ஸ், பிரபுவுடன் பெரிய தம்பி..

அஜித்துடன் சிட்டிசன்  என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் இப்படிப்பட்ட நடிகை நக்மா 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் தலை காட்டவே இல்லை ஆனால் இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருந்த வண்ணமே இருக்கின்றனர் தற்பொழுது 48 வயதாகும் திருமணம் செய்து செய்து கொள்ளவில்லை.

படங்களின் நடிக்காதது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்து வருகிறது.  சமீபத்தில் அவரிடம்  ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் பதில் அளித்தது எனக்கு திருமணம் செய்யவே கூடாது என்பதெல்லாம் எண்ணம் இல்லை..

Actress nagma
Actress nagma

சொல்லப்போனால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தைகள் என வாழ ஆசையாக இருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம் அப்படி ஏதாவது நடக்குதா என்று.. இப்போ திருமணம் செய்து கொள்ளாமலேயே நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் சந்தோஷம் என் வாழ்க்கையில் குறையவே இல்லை என அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.