44 வயதில் அந்த மாதிரி காட்சிகள் எல்லாம் எப்படி சாத்தியம்..? புலம்பும் மாதவன் பட நடிகை..!

pooja-1

பொதுவாக சினிமாவில் இருக்கும் கதாநாயகிகள் பலரும் ஒரு நேரத்திற்கு பிறகு அவர்கள் கதாநாயகி அந்தஸ்தை இழப்பது மட்டுமில்லாமல் அம்மா அண்ணி சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தள்ளப்படுகிறார்கள் அந்த வகையில் திரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் மட்டுமே வயதானாலும் சரி என்றும் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா இவர் அதன் பிறகு அஜித்துடன் இணைந்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் பால இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படத்திலும் பூஜா பார்வையாளராக நடித்து பல்வேறு பாராட்டுகளையும் புகழையும் பெற்றுள்ளார். இன் நிலையில் நமது நடிகை கடைசியாக நடித்த  திரைப்படம் என்றால் அது விடியும் வரை திரைப்படம் தான்.

இவ்வாறு நமது பூஜாவுக்கு படிப்படியாக பட வாய்ப்பு குறைவதற்கு முக்கிய காரணம் அவர் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து மற்ற படங்களில் கவனம் செலுத்தியது தான் காரணம். இந்நிலையில் இலங்கை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நமது நடிகை சினிமாவை விட்டுவிட்டு தனது குடும்ப வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் ரசிகர்கள் அவரை மறக்கவில்லை அந்த வகையில் மீண்டும் அவர் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள் இதற்கு பதில் அளித்து நமது நடிகை அய்யய்யோ எனக்கு 44 வயசு ஆயிடுச்சு என்று கூறியுள்ளார் இப்ப போய் ரொமான்ஸ் பண்ண முடியுமா இதுக்கு மேல எனக்கு அம்மா ரோல் சித்தி ரோல் தான்  நடிக்க முடியும் என்று பகிர்ந்துள்ளார்.

pooja -1
pooja -1