அப்பொழுதே சிம்ரனுக்காக மேனேஜர் பதவியை விட்டு விலகிய சூர்யா.! சிவகுமார் போட்ட கண்டிஷன்..

surya
surya

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர் சூர்யா தற்பொழுது நடித்து வந்தாலும் படித்து முடித்தவுடன் தனியா துறையில் சாதாரண வேலை பார்த்து வந்தார். அங்கு வேலை செய்யும் பொழுதும் யாரிடமும் நான்தான் நடிகர் சிவகுமாரின் மகன் என காட்டிக்கொள்ள மாட்டாராம் இவர் மேனேஜர் பொறுப்பிற்கு வந்தவுடன் இரண்டு மாதங்கள் கழித்து தான் படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

ஆனால் இவருக்கு பெரிதாக சினிமாவில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து மேனேஜர் வேலையை பார்க்கலாம் என முடிவெடுக்க அந்த நேரத்தில் நேருக்கு நேர் படத்தில் சிம்ரன் ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெரிந்துக் கொண்ட இவர் பிறகு சிம்ரனுடன் நடிக்க ஆசைப்பட்ட மேனேஜர் வேலையை வேண்டாம் என முடிவு செய்தாராம்.

எனவே இவர் வேலையை விட்டு நீங்க போகும் நேரத்தில் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இப்பொழுதுதான உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ஏன் என கேட்டுள்ளனர். அதற்கு சினிமாவின் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக் கூற அதற்கு அவர்கள் கிண்டல் பண்றியா உனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்திருக்கும் நீ எப்படி சினிமாவில் நடிக்க முடியும் என கேட்டு உள்ளார்கள்.

அதன் பிறகு தான் சூர்யா அவர்களிடம் நான் நடிகர் சிவகுமாரின் மகன் என கூற அனைவரும் ஏன் இதனை பற்றி யாரிடமும் சொல்லவில்லை என கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் படித்து முடித்த உடனே சிவகுமார் போட்ட முதல் கண்டிஷன் நீங்கள் எங்கே போனாலும் என் பெயரை வைத்து எந்த லாபத்தையும் பெறக்கூடாது என சொல்லி இருந்தாராம்.

இதன் காரணத்தினால் தான் அதனை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என கூறியிருக்கிறார். எனவே மேனேஜர் வேலையை விட்டுவிட்டு நேருக்கு நேர் படத்தில் சூர்யா சிம்ரனுடன் இணைந்து நடித்துள்ளார் இவ்வாறு இந்த சுவாரசியமான தகவலை நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து அதாவது தற்போது எதிர்நீச்சல் சீரியல் நடிகர் குணசேகரன் கூறி உள்ளார்.