அந்த இடத்தில் வாரிசை கதற விட்டு திரையரங்கை தட்டிச் சென்ற துணிவு.! எத்தனை திரையரங்குகள் தெரியுமா.?

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரே நாளில் மோத உள்ளது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் அவர்கள் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தும் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த திரைபடத்திற்கான போஸ்டர் பிரமோஷன் பணிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஒரே தினத்தில் இவர்கள் இருவரும் மோத உள்ளதால் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் அதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் வெளியிடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல விஜயின் வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இதனால் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கும் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் ஒரு முக்கிய இடத்தில் அதிக திரையரங்குகளை பிடிக்க முடியாமல் போனதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது விஜயின் வாரிசு திரைப்படம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் 45 திரையரங்குகளில் மட்டும் வெளியிட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்திற்காக 60 திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் ரசிகர்களுக்கு சோகமடைய செய்திருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாக உள்ளதால் பொங்கல் தினம் கோலாலமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.