படப்பிடிப்பு தளத்தில் ஆறு மணி ஆச்சுன்னா.. ஜோதிகா முதலில் கேட்கும் விஷயம் இதுதான் – அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்.!

jothika
jothika

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அசத்தியவர். இவர் திருமணம் செய்து கொண்ட பிறகும் முக்கிய நடிகர்கள் மற்றும் சோலோ படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஜோதிகா முதலில் அஜித்தின் வாலி திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பின் நடிகை ஜோதிகாnமுகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி, என பல வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர்.  இதுவரை ஜோதிகா அஜித் விஜய் சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்தி கொண்டதோடு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் ஓடினார். இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஜோதிகா தற்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் சினிமா உலகில் நடந்த தகவல்களைப் பற்றி த்ரோ பேட் வீடியோ இணையதளத்தில்  வெளியாகி வருகிறது. இதில் சிம்ரன் குறித்து அவர் பேசி உள்ளார் மாயாவி படத்தில் சூர்யா சிம்ரன் ரசிகையாக நடித்திருப்பார் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் கூறியது அம்மா எப்பவும் சிம்ரனை புகழ்வார்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஸ்லிம்மாக இருக்காங்க அவங்க டான்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு என்று கூறிக் கொண்டே இருப்பார் சூர்யாவுக்கும் இந்த விஷயம் தெரியும் ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் ஆறு மணி ஆனதும் பசி தாங்க முடியாமல் போண்டா பஜ்ஜி ஆர்டர் செய்து நான் சாப்பிடுவேன் என சிரித்துக் கொண்டே பதிலை சொன்னார் ஜோதிகா. இதை அறிந்த ரசிகர்கள் நீங்கள் கொழுக் மொழுக்கென்று இருந்ததால் தான் பார்ப்பதற்கு அழகாக இருந்தீர்கள் இது எல்லாம் ஒரு விஷயம் கிடையாது எனக் கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.